அரைச்சு விட்ட ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பருப்பு தண்ணீர் (அல்லது) அரிசி களைந்த நீர் - 3 கப்

தக்காளி - 1

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 தேக்கரண்டி

பூண்டு - 4 பல்

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

கடுகு, பெருங்காயம், கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், எண்ணெய் - தாளிக்க

கொத்தமல்லி - ஒரு கைப்பிடி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பருப்பு தண்ணீர் இல்லையென்றால் அரிசி களைந்து இரண்டாவதாக கழுவிய நீரில் புளியை ஊற வைக்கவும். சீரகம், பூண்டு மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை சுடு நீரில் போட்டு தோலுரித்து நசுக்கி வைத்து கொள்ளவும்.

எண்ணெயை காய வைத்து தாளிக்க கூறியுள்ளதை தாளிக்கவும்.

தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும்.

புளி கரைசலை சேர்த்து உப்பு மற்றும் மஞ்சள் தூளும் சேர்த்து கொதிக்க விடவும்.

நுரைகட்டி வரும் போது அடுப்பை அணைத்து விடவும். இறக்கி வைத்து மேலே கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: