அரைச்சுவிட்ட ரசம்
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 1/2
புளி - சறிய எலுமிச்சை அளவு
சாம்பார் தூள் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 5 பற்கள்
தக்காளி - 3
கொத்தமல்லித் தழை - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எண்ணைச் சட்டியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு வறுக்கவும்.
பின்பு சிறிதாக நறுக்கிய வெங்காயத்தை அதே சட்டியில் போட்டு வதக்கவும்.
புளியை சிறிது சுடு தண்ணீரில் ஊற வைத்து, நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் வதங்கியவுடன் சிறிதாக நறுக்கிய பூண்டு மற்றும் தக்காளியை வதக்கவும்.
புளி கரைச்சலோடு உப்பு, சாம்பார் தூள் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை கொதிக்கவிடவும்.
ரசம் தயார் ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்