அப்பகோவ இலை ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அப்பகோவ இலை - 2 கைப்பிடி அளவு

தனியா - 1 மேசைக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1 மேசைக்கரண்டி

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை - 4 இணுக்கு

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

வரமிளகாய் - 1

சின்ன வெங்காயம் - 1

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

புளியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கவும்.

அப்பகோவ இலையை நன்றாக கழுவி, நீர் வடிந்ததும் வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.

தக்காளியை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

வதக்கிய இலையுடன் சின்ன வெங்காயம், வரமிளகாய் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஊறிய புளியுடன், வேகவைத்த தக்காளியைச் சேர்த்து நன்கு நீர்க்க கரைத்து வடித்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காயந்ததும் கடுகு தாளித்து, சின்ன வெங்காயம், வரமிளகாய் போட்டு வதக்கவும்.

அதனுடன் புளிக் கரைசல், தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து ஒரு கொதிவந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

அப்பகோவ இலை மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது. சளித்தொல்லைக்கு அருமருந்தாகும். இந்த இலைக்கு மணம் உண்டு, ஆனால், நறுமணம் அல்ல. ஒரு வித பிடிக்காத மணம் என்றே கூறலாம். இந்த இலையின் பெயரை எங்கள் ஊரில் இப்படித்தான் உச்சரிப்பது வழக்கம்.