அன்னாசி ரசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அன்னாசிபழ துண்டு - 3 (1/4 பழம்)

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

சீரகம் - 1 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்துமல்லி இலை - சிறிது

கடுகு - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, ஜூஸை வடிக்கட்டி வைக்கவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி, மசித்து வைக்கவும்.

சீரகம், மிளகை பொடித்து வைக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறவும்.

எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, கீறிய பச்சை மிளகாய்,மசித்த தக்காளி, வடிக்கட்டிய ஜூஸ், பொடித்த சீரக, மிளகு, 2 தம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொடிக்க விடவும்.

கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: