7 கப் கேக் (1)
0
தேவையான பொருட்கள்:
பால் - ஒரு கப்
சர்க்கரை - 3 கப்
கடலைமாவு - ஒரு கப்
நெய் - ஒரு கப்
தேங்காய் - ஒரு கப்
செய்முறை:
பால், சர்க்கரை, கடலைமாவு, நெய், தேங்காய் எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி கட்டி இல்லாமல் கலக்கவும்.
அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் இந்தக் கலவையை கொட்டி நன்றாக 15 முதல் 20 நிமிடம் வரை கிளறவும்.
அதிலிருந்து நெய் பிரிந்து வரும் போது ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டவும்.
பிறகு அதை சமமாகப் பரப்பி விடவும். ஆறிய பிறகு சிறு வில்லைகளாகப் போடவும்.