ஹார்லிக்ஸ் கேக்
தேவையான பொருட்கள்:
ஹார்லிக்ஸ் - 200 கிராம் வறுத்த அரிசி மாவு - 125 கிராம் வெண்ணெய் - 150 கிராம் சீனி - 125 கிராம் முட்டை - 3 பால் - கால் கப் கன்டண்ஸ்டு மில்க் - 2 மேசைக்கரண்டி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி ரோஸ் (அ) ஆரஞ்சு எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். அவனை 180°c ல் முற்சூடு செய்யவும்.
முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து
அதனுடன் சீனியைச் சேர்த்து அடித்துக் கலக்கவும். வெண்ணெயை உருக்கிக் ஆறியவுடன் முட்டை கலவையில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு ஹார்லிக்ஸ்
வறுத்த அரிசி மாவு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதனுடன் பால்
கன்டண்ஸ்ட் மில்க் மற்றும் ஆரஞ்சு எசன்ஸ் சேர்த்து கலந்து அடித்துக் கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் வெண்ணெயைத் தடவி
அதில் கலவையை ஊற்றவும்.
பிறகு அவனில் 45 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும்.
சுவையான ஹார்லிக்ஸ் கேக் ரெடி.