ஸ்ட்ராபெர்ரி ஜாம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சர்க்கரை - 2 கப்

எலுமிச்சை - 2

ஸ்ட்ராபெர்ரி - 1/2 kg

செய்முறை:

எலுமிச்சையின் மேல் தொலை ஒரு போர்க் கொண்டு சுரண்டி தனியே எடுத்து வைக்கவும். இது தான் ஜெஸ்ட். பிறகு சாறு பிழிந்து தனியே வைக்கவும்.

ஸ்ட்ராபெர்ரியின் இலையை நீக்கி பாதியாக நறுக்கி வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில் எலுமிச்சை சாறு, ஜெஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்து கம்மியான தீயில் சர்க்கரை கரையும் வரை கிளறவும். இது கிட்ட தட்ட 10 நிமிடங்களாவது ஆகும்.

ஸ்ட்ராபெர்ரி சேர்த்து கம்மியான தீயில் 20 நிமிடம் வேக விடவும். இடை இடையே கிளறி விடவும்.

ஒரு தட்டை குளிர் சாதன பெட்டியில் வைத்து குளிர விட்டு ஒரு ஸ்பூன் ஜாம் விட்டால் ஜெல் மாதிரி ஒட்டி கொண்டால் அது தான் சரியான பதம்.

இறக்கி சூடாக இருக்கும்போதே ஜாடியில் போட்டு நன்றாக மூடி வைக்கவும்.

குறிப்புகள்: