ஸ்டஃப்டு ஹாட் பன்ஸ்
தேவையான பொருட்கள்:
மாவு பிசைய மைதா - 2 கப் பால் - அரை கப் வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி சீனி - அரை தேக்கரண்டி ஈஸ்ட் - ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு தேக்கரண்டி ஃபில்லிங் செய்ய : துருவிய சீஸ் - ஒரு கப் (விரும்பினால்) வேகவைத்த கோழி - ஒரு துண்டு கேரட் - ஒன்று வெங்காயம் - ஒன்று பச்சை பட்டாணி - 2 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் - 2 இஞ்சி
பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி கரம் மசாலா - அரை தேக்கரண்டி மல்லித் தழை - சிறிது உப்பு - தேவையான அளவு முட்டை - ஒன்று
செய்முறை:
அரை கப் தண்ணீரில் ஈஸ்ட்டை கலந்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் மைதா
வெண்ணெய்
பால்
சீனி
ஆலிவ் ஆயில்
உப்பு
கரைத்த ஈஸ்ட் சேர்த்து நன்றாக பிசைந்து காற்று புகாமல் மூடி வைக்கவும்.
காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வேக வைத்த கோழியை எலும்பு நீக்கி சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்.
சீஸ் தவிர மற்ற அனைத்தையும் ஒரு கடாயில் போட்டு பச்சை வாசம் போகும் வரை வேக விட்டு பிரட்டி வைக்கவும்.
மூன்று மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு இரு மடங்காகி இருக்கும்.
மாவினை சப்பாத்தி போல இட்டு அதன் மேல் காய்கறி கலவையை வைத்து
சீஸ் தூவவும்.
பின் நன்றாக ரோல் செய்து முட்டையின் மஞ்சள் கருவை தடவவும்.
கேக் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி ரோல் செய்தவற்றை அடுக்கி
180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 15 நிமிடம் வரை வேக வைத்து எடுக்கவும். 15 நிமிடங்கள் கழித்து அவனிலிருந்து எடுத்து ஆற வைக்கவும்.
சுவையான ஸ்டஃப்டு ஹாட் பன்ஸ் ரெடி. இதற்கு நீங்கள் விரும்பியவாறு ஸ்டஃப்பிங் வைத்துக் கொள்ளலாம்.