வேகான் ரவை கேக்
தேவையான பொருட்கள்:
ரவை-2 கப்
மைதா-1 கப்
சர்க்கரை -11/2 கப்
வெண்ணைய் உருக்கியது -1 கப்
பால்-11/2 கப்
தண்ணீர்-1/2 கப்
பிஸ்தா சீவல்-1டேபிள்ஸ்பூன்
பாதாம் சீவல்-1டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர்-1டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்
உப்பு -சிட்டிகை
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
செய்முறை:
ஓவனை 350க்கு முற்சூடு செய்யவும்.
முதலில் மைதா,ரவை,பேக்கிங்க் பவுடர்,பேக்கிங் சோடா,உப்பு,மஞ்சள்தூள் ஒரு பாத்திரத்தில் ஒன்றன்பின் ஓன்றாக எல்லாவற்றையும் சலித்தால் சீராக கலந்து இருக்கும்.
சர்க்கரையை பொடிக்கவும்.
பாதாம் பிஸ்தா துருவலை சிறிது மைதாவில் மிக்ஸ் பண்ணி தனியே வைக்கவும்
பின்பு வெண்ணை,பால்,தண்ணீர் ,சர்க்கரையை நன்றாக கலக்கவும்.இந்த கலவையை மாவு கலவையுடன் நன்றாக கலந்து வைக்கவும்
வெண்ணை தடவிய பேக்கிங் ட்ரேயில் கலவையை கொட்டி மேலே பாதாம் ,பிஸ்தா துருவலை தூவவும்
ஓவனில் 30-35 நிமிடம் வைக்கவும்.
குறிப்புகள்:
இது இனிப்பு குறைவாய் உள்ள முட்டை சேர்க்காத லெபானியன் கேக் வகை.
இனிப்பு அதிகம் விரும்பினால் இன்னும் ஒரு கப் சீனி சேர்க்கலாம்.
ஓவனில் வெப்பம் சீராக பரவ எப்போதும் நடுவில் உள்ள ரேக்கிலேயே கேக் ட்ரேயை வைக்கவும்.
பேக்கிங் நேரம் ஓவனை பொறுத்து சிறிது கூடவோ ,குறையவோ செய்யும் அதனால் பொன்னிறமானதும் நடுவில் குத்திபார்த்துவிட்டு எடுக்கவும்