வெள்ளை சாக்லெட் பிஸ்கட்
தேவையான பொருட்கள்:
மென்மையான பட்டர்/மாஜரீன் - 150 கிராம்
ப்ரவுன் சீனி (சர்க்கரை) - 75 கிராம்
சீனி (சர்க்கரை) - 75 கிராம்
வெனிலா சீனி - ஒரு பக்கற்
முட்டை (மீடியம் அளவு) - 2
கோதுமைமா(மைதாமா) - 200 கிராம்
ஆப்பச்சோடா - ஒரு தேக்கரண்டி
கோக்கோ பவுடர் - 30 கிராம்
பால் - ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை சாக்லெட் (சிறியதாக வெட்டியது) - 200 கிராம்
கோதுமைமா (மைதாமா) - ஒரு மேசைக்கரண்டி
வால்நட்/முந்திரிப்பருப்பு (உடைத்தது) - 2 தேக்கரண்டி
செய்முறை:
முட்டையுடன் பிரவுன் சீனி (பிரவுன் சர்க்கரை), சீனி (சர்க்கரை), வெனிலா சீனி(வெனிலா சர்க்கரை) ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு சீனி வகைகள் கரையும் வரை அடிக்கவும்.
அதன் பின்பு சீனி (சர்க்கரை) கரைந்ததும் அதை பட்டருடன் சேர்த்து அடித்து கலக்கவும்.
கலந்த சீனி (சர்க்கரை), பட்டர் ஆகியவற்றுடன் கோதுமைமா(மைதாமா), ஆப்பச்சோடா ஆகியவற்றை கலந்து அடிக்கவும் .
இக்கலவை ஓரளவு அடித்த பின்பு இதனுடன் வெள்ளை சாக்லெட் கலந்து அடிக்கவும்.
அதன் பின்பு இக்கலவை ஓரளவு அடித்த பின்பு இதனுடன் கோக்கோபவுடர், பால் கலந்து அடிக்கவும்.
ஒரு தட்டில் கேக் தாள் போடவும் அல்லது கொஞ்சம் பட்டரை எல்லா இடத்திலும் பூசவும். அதன் மேல் மைதாமா (கோதுமைமா) தூவவும்.
அதன் பின்பு இக்கலவையை சிறிய சிறிய வட்டமாக 4 செ.மீ அளவு உயரத்திற்கு அதிக எண்ணிக்கையில் இடைவெளி விட்டு ஊற்றவும் .
ஒவ்வொரு வட்டத்திலும் ஒவ்வொரு முந்திரிப்பருப்பு அல்லது வால்நட் நடுவில் வைத்து பேக்(Bake) பண்ணவும்.
அதன்பின்பு பிஸ்கட் தயாரானதும் பரிமாறவும். (Baking time -10 நிமிடம்) (180-200 பாகை ,காஸ் 3- 4)
குறிப்புகள்:
வெள்ளை சாக்லெட் பிஸ்கட் சிறுவர்களுக்கு விருப்பமான ஒர் பிஸ்கட் வகையாகும். கவனிக்க வேண்டிய விஷயங்கள் - (1) வால்நட்/முந்திரிப்பருப்பு(இரண்டாக உடைத்தது). (2)(Baking time -10 நிமிடம்) (180-200 பாகை ,காஸ் 3- 4).