வென்னிலா கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 1 கப்
சீனி - 1 கப்
மார்கரின் - 1/2 கப்
முட்டை - 3
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
செய்முறை:
சீனியை நன்றாக பொடித்துக் கொள்ளவும்
அதனுடன் மார்கரினை கலந்து நன்கு நுரைத்து லேசாக ஆகும் வரை அடித்துக் கொள்ளவும் (தொட்டு பார்க்கும் போது சீனி கையில் தட்டு படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்)
முட்டையை தனியே அடித்து சீனி கலவையுடன் சேர்க்கவும்
பின் தயிர், எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்
மைதா மாவு, பேக்கிங் பவுடரை சலித்து , அதனையும் சேர்த்து கலக்கவும்
கலக்கும் போது ஒரே பக்கமாக கலக்கவும். பின் ஒரு ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி மாவினை கொட்டி அவனில் 150 ல் 35 நிமிடம் பேக் செய்யவும்
ஒரு சிறு குச்சியை வைத்து குத்தி பார்த்து வெந்ததை உறுதி செய்து எடுத்து குளிர்சாதன பெட்டியில் 30 நிமிடம் வைத்து எடுத்து கொள்ளவும்