வெனிலா கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - ஒரு கப் சர்க்கரை - அரை கப் பால் - கால் கப் வெண்ணெய் - 1/3 கப் முட்டை - 2 உப்பு - 2 சிட்டிகை பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி மைதா - 2 தேக்கரண்டி எண்ணெய் - சிறிது
செய்முறை:
மாவுடன் உப்பு
பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும். பேக் செய்ய போகும் பாத்திரத்தில் சிறிது எண்ணெய் தடவி 2 தேக்கரண்டி மைதாவை தூவி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை கலந்து அடிக்கவும். அத்துடன் உருக்கி ஆறிய வெண்ணெயை சேர்க்கவும்.
பின் பால்
வெனிலா எசன்ஸ் மற்றும் சர்க்கரையை ஒவ்வொன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை மாவுடன் சேர்த்து அதிகம் அடிக்காமல்
கட்டியின்றி கலந்து கொள்ளவும்.
பேக்கிங் ட்ரேயில் இந்த கலவையை ஊற்றி அவனில் பேக் செய்யவும். 10 - 15 நிமிடத்தில் (அ) உள்ளே விட்ட டூத் பிக் சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும்.
சுவையான ஸாஃப்ட் ஸ்பாஞ்சி வெனிலா கேக் தயார். எத்தனை சாஃப்ட் என நான் சொல்வதை விட படமே சொல்லும் :) இது சர்க்கரை சற்று குறைவான கேக். டீ டைமிற்கு ஏற்றது.