வெண்ணெய் குறைந்த கேக் வகை
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 300 கிராம்
வெண்ணெய் - 90 கிராம் அல்லது 3 மேசைக்கரண்டி
பொடித்த சர்க்கரை - 300 கிராம்
பெரிய முட்டை - 3
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
வெந்நீர் - 250 மில்லி
செய்முறை:
சர்க்கரையையும், வெண்ணெயும் நன்றாக குழைக்கவும்.
அடித்த முட்டைகளை சிறிது சிறிதாக சேர்த்து எசன்ஸ் சேர்க்கவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து இரு முறை சலிக்கவும்.
குழைத்த கலவையில் சலித்த மாவைச் சேர்த்து சூடான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கலவை ஒன்றாக சேரும் வரை மரக்கரண்டியினால் அடிக்கவும். கலவை மிகவும் கெட்டியாக இருக்கக் கூடாது.
10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
கலவையை அதில் போடவும். 350 டிகிரி சூட்டில் சுமார் ஒரு மணிநேரம் பேக் செய்யவும்.
கேக் செய்த அன்றே சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.