வெண்ணெய் இல்லாத கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 90 கிராம்

பொடி செய்யாத சர்க்கரை - 90 கிராம்

முட்டை - 3

பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி

வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முட்டைகளையும், சர்க்கரையையும் பீங்கான் கிண்ணத்தில் போட்டு முட்டையடிக்கும் கருவியினால் மிக நன்றாக அடிக்கவும்.

அடித்த முட்டை, சர்க்கரை குழகுழவென்று நுரைபோல் இருக்கும். மைதா மாவு, பேக்கிங் பவுடர், கோகோ பவுடர் இவற்றை சலிக்கவும்.

மாவையும் வெனிலா எசன்ஸையும் அடித்து வைத்துள்ள முட்டைக் கலவையுடன் சேர்க்கவும்.

விரல் நுனிகளால் மைதா மாவை கலக்கவும். (மாவு பிசைவது போல் கலக்கக் கூடாது).

7" கேக் பேக் செய்யும் இரண்டு தட்டுகளில் இடைவெளி விடாமல் வெண்ணெயை தடவிக் கொள்ளவும்.

கலவையை இரு தட்டுகளிலும் சரிசமமாக நிரவ வேண்டும்.

400 டிகிரி F சூட்டில் சுமார் 10 இருந்து 15 நிமிடம் பேக் செய்யவும்.

சூடு சிறிது ஆறியவுடன் உடையாமல் எடுத்து ஜாமை இரு கேக்குகளிலும் நன்கு பசை தடவுவது போல் தடவி இரு கேக்குகளையும் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து நன்கு ஒட்டி விடவும்.

வெண்ணெய் ஐசிங் அல்லது கிளாஸ் ஐசிங் செய்யலாம்.

குறிப்புகள்: