வெணிலா கப் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - 200 கிராம் சர்க்கரை - 150 கிராம் வெண்ணெய் - 115 கிராம் முட்டை - 3 பால் - 60 மிலி பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி உப்பு - ஒரு கிள்ளு Frosting செய்ய: கிரீம் சீஸ் - 50 கிராம் பவுடர் சுகர் - 40 கிராம் ரேஸ்பெரி ஜாம் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். மைதா
பேக்கிங் பவுடரை ஒன்றாக சேர்த்து சலித்து உப்பை சேர்த்து கொள்ளவும். வெண்ணெயை அறை வெப்ப நிலையில் உருக்கிக் கொள்ளவும். வெண்ணெயை நன்கு அடித்துக் கொள்ளவும்.
சர்க்கரையை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். வெனிலா எசன்ஸை சேர்த்துக் கொள்ளவும்.
பாலையும்
மாவையும் மாற்றி மாற்றி கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்தில் கலக்கவும்.
அதிகம் அடிக்காமல் பக்குவமாக கட்டி இல்லாமல் கலக்கவும்.
கப் கேக் ட்ரேவில் பாஸ்டல்களை(pastal) அடுக்கி
மாவினை பிரித்து ஊற்றவும்.
350 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 25 நிமிடம் வரை வைக்கவும்.
நன்கு பொன்னிறமானதும் வெளியே எடுத்து
நன்கு ஆற விடவும்.
ஃப்ரோஸ்டிங் செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கிரீம் பதத்தில் அடித்துக் கொள்ளவும்.
பின் ஃப்ரோஸ்டிங் கோனில் கிரீமை நிரப்பிக் கொள்ளவும்.
வேண்டிய வடிவத்தில் அலங்கரிக்கவும்.
சுவையான வெனிலா கப் கேக் வித் ரேஸ்பெரி கிரீம் ரெடி.