வெஜிடபுள் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4 தக்காளி - 4 கேரட் - 4 பீட்ரூட் - 4 சர்க்கரை - 3 கப் சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கு

கேரட் மற்றும் பீட்ரூடைத் தோல் சீவி

துருவிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக அரிந்து கொள்ளவும். அனைத்து காய்கறிகளையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்தவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையுடன் சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதம் வரும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.

சுலபமாகச் செய்யக் கூடிய சுவையான வெஜிடபுள் ஜாம் ரெடி. காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரைக் கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்: