வெஜிடபிள் ஜாம்
0
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 4
தக்காளி - 4
காரட் - 4
பீட்ரூட் - 4
சர்க்கரை - 3 கப்
சிட்ரிக் அமிலம் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
காய்கறிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து தோல் சீவி தேங்காய் துருவல் போல் துருவிக் கொள்ளவும்.
தக்காளியை பொடிப்பொடியாக அரிந்து கொள்ளவும்.
எல்லா காய்கறிகளையும் கொஞ்சம் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்த பிறகு சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து அடுப்பில் வைத்து அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறவும்.
குறிப்புகள்:
இதை காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.