விக்டோரியா சாண்ட்விச் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்

பட்டர் அல்லது மார்ஜரின் - 200 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

முட்டை - 200 கிராம் ( 3 அல்லது 4)

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஜாம் - பைனாப்பிள் அல்லது மிக்ஸ்ட் ஃப்ரூட் - தேவைக்கு

ஐஸிங் சுகர் - 1- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து மும்முறை சலித்து வைக்கவும்.

சர்க்கரையை பொடி செய்து வைக்கவும். பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் அல்லது ப்ரவுன் பேப்பர் 2 போட்டு எண்ணெய் தடவி ரெடி செய்து வைக்கவும்.

ஒரு பவுளில் பட்டர் அல்லது மார்ஜரின் எடுத்து பீட் செய்து கொள்ளவும். பின்பு அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.

பவுலில் முட்டையை ஒன்றன்பின் ஒன்றாக விட்டு, வெனிலா எசன்ஸ் விட்டு திரும்பவும் பீட் செய்யவும்.(fluffy)சலித்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிரட்டவும், கிண்டவோ பீட் செய்யவோ கூடாது.

தயார் செய்த கேக் மாவை பேக்கிங் ட்ரேயில் விட்டு சமப்படுத்தி முற்சூடு செய்த அவனில் 170 -180 டிகிரியில் 30 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பேக் செய்த கேக் நன்றாக ஆறிய பின்பு மேல் பகுதி, கீழ் பகுதி என்று இரண்டு பகுதியாக கட் பண்ணவும்.

ஒரு பகுதியின் மேல் ஜாமை பரத்தி வைக்கவும், அதன் மேல் இன்னொரு பகுதியை வைத்து,மேலே ஐஸிங் சுகரை தூவி விடவும்.

சிறிது நேரம் கழித்து கட் செய்து பரிமாறவும்.

சூப்பரான ஜாம், ஐஸிங் சுகர், கேக் சுவையுடன் கூடிய விக்டோரியா சாண்ட்விச் கேக் ரெடி.

குறிப்புகள்:

இது குழந்தைகளை மிகவும் கவரும். மாறுதலுக்கு இவ்வாறு செய்து கொடுக்கலாம்.