வால்நட் ப்ரௌனிஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா / ஆல் பர்பஸ் ஃப்ளார் - அரை கப் கோகோ பவுடர் - 1/3 கப் பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி முட்டை - 2 சர்க்கரை - ஒரு கப் வெண்ணெய் அல்லது வெஜிடபிள் ஆயில் - அரை கப் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி வால்நட் - கால் கப்

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை அடித்துக் கொள்ளவும். பின்னர் முட்டைகளை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.

ஆல் பர்பஸ் ஃப்ளார்

கோ கோ பவுடர்

உப்பு மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து இரண்டு அல்லது மூன்று முறை சலித்துக் கொள்ளவும்.

இப்போது மாவுடன் முட்டைக்கலவையை சேர்த்து கட்டியில்லாமல் கலந்து கொள்ளவும்.

இதனுடன் வால்நட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

8X8 இன்ச் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா தூவி வைக்கவும். இதில் தயார் செய்து வைத்துள்ள ப்ரௌனி மாவு கலவையை ஊற்றவும்.

அவனை 350 டிகிரி F ல் முற்சூடு செய்யவும். 22 - 25 நிமிடங்களில் ப்ரௌனி வெந்துவிடும். ட்ரேயின் ஓரங்களில் இருந்து ப்ரௌனி சிறிது பெயர்ந்து இருந்தால் ப்ரௌனி தயாரானதை உறுதி செய்து கொள்ளலாம்.

அரை மணி நேரம் ஆற விட்டு ட்ரேயில் கவிழ்த்து வைக்கவும். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு சர்வ் பண்ணலாம்.

மேலே க்ரிஸ்ப்பியாகவும் உள்ளே மிருதுவான சுவையான ‘வால்நட் ப்ரௌனிஸ்’ தயார்.

குறிப்புகள்: