லைட் ஃப்ரூட் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 100 கிராம்

பட்டர் அல்லது மார்ஜரின் - 100 கிராம்

முட்டை - 100 கிராம் (2 or 3)

சர்க்கரை - 100 கிராம்

உலர்ந்த ஃப்ரூட்ஸ்- 25 - 50 கிராம்

ஆரஞ்சு ஜூஸ் - 1 டேபிள் ஸ்பூன் (optional)

பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - அரை டீஸ்பூன்

ஸ்பைசஸ் - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

(நட்மெக், பட்டை, ஏலம் பொடித்துக்கொள்ளவும்)

செய்முறை:

மைதா, பேக்கிங் பவுடர், ஸ்பைசஸ் சேர்த்து மும்முறை சலித்து கொள்ளவும்.

ஒரு பவுளில் பட்டரை பீட் செய்து கொண்டு, பொடித்த சர்க்கரையையும் சேர்த்து நன்றாக அடித்து(fluffy) மிக்ஸ்செய்யவும். பீட்டர் இருந்தால் வசதியாக இருக்கும்.

முட்டையை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, எசன்ஸ் சேர்க்கவும், நன்றாக பீட் செய்யவும்.

சலித்த மாவில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன் உலர்ந்த பழ வகைகளை கலந்து (coat) செய்து வைத்துக் கொள்ளவும். இதனை கேக் மாவுடன் மெதுவாக கலக்கவும், ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.

பேகிங் ட்ரேயில் ப்ரவுன் அல்லது பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் அல்லது பட்டர் தடவி மைதா மாவை கொஞ்சம் தூவி (dust) ரெடி செய்து கொள்ளவும்.

பேக்கிங் ட்ரேயில் தயார் செய்த கேக் மாவுக்கலவையை விட்டு முற்சூடு செய்த அவனில் 175 -180 டிகிரியில் 35 - 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். குளிர்ந்த பின்பு கட் செய்து பரிமாறவும்.

சுவையான சாஃப்டான லைட் ஃப்ரூட் கேக் ரெடி.

குறிப்புகள்: