ரெட் வெல்வெட் சீஸ் கேக்
தேவையான பொருட்கள்:
கேக் கலவைக்கு: மைதா - முக்கால் கப் வெண்ணெய் (உப்பில்லாதது) - அரை கப் கொக்கோ பவுடர் - 3 மேசைக்கரண்டி பொடித்த சீனி - ஒரு கப் முட்டை - 2 வினிகர் - ஒரு தேக்கரண்டி செர்ரி ரெட் கலர் - ஒரு தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி உப்பு - கால் தேக்கரண்டி பட்டர் பேப்பர் சீஸ் க்ரீம் கலவைக்கு: பிலோடெஃபியா சீஸ் க்ரீம் - 8oz (அ) அரை கப் முட்டை - ஒன்று வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி பொடித்த சீனி - 3 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
வெண்ணெய்
சீஸ் க்ரீம்
முட்டை ஆகியவற்றை குளிர் சாதனப் பெட்டியிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியில் எடுத்து வைத்துவிடவும். அவனை 180 டிகிரி அளவில் முற்சூடு செய்யவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் வெண்ணெயையும்
சீனியையும் சேர்த்து நன்கு க்ரீம் போல வரும் வரை எலக்ட்ரிக் பீட்டராலோ அல்லது நார்மல் கை பீட்டராலோ நன்கு அடித்துக் கலக்கவும்.
அத்துடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு நுரை பொங்க அடித்துக் கலக்கவும்.
பிறகு செர்ரி ரெட் கலர்
வினிகர்
கொகோ பவுடர் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து கொள்ளவும். அதனுடன் சிறிது சிறிதாக மைதா மாவைச் சேர்த்து நன்கு ஒன்று சேர அடித்துக் கலக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் சீஸ் க்ரீம் கலவைக்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு ஒன்று சேர க்ரீம் பதத்திற்கு வரும் வரை அடித்துக் கலந்து வைக்கவும்.
பேக் செய்யும் பாத்திரத்தில் லேசாக வெண்ணெய் தடவி
பட்டர் பேப்பரைப் போட்டு அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவவும். அதில் கேக் கலவையில் முக்கால் பாகத்தை ஊற்றி சமப்படுத்தி
அதன்மேல் க்ரீம் கலவை முழுவதையும் ஊற்றி லேசாக ட்ரேயை தட்டினால் ஓரளவு பரவலாக இருக்கும்.
அதன்மேல் மீதமுள்ள கேக் கலவையை பரவலாக ஊற்றிவிடவும்.
அதன்மீது கத்தியால் மெதுவாக அலை போல வளைவுகள் வரைந்துவிடவும். (பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்). பிறகு முற்சூடு செய்த அவனில் வைத்து 28 முதல் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
ரெட் வெல்வட் சீஸ் கேக் தயார். நன்கு ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிட சுவையாகவும்
மிருதுவாகவும் இருக்கும்.