ரிப்பன் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 200 கிராம்

பட்டர் அல்லது மார்ஜரின் - 200 கிராம்

முட்டை - 200 கிராம் (3 அல்லது 4)

சர்க்கரை - 200 கிராம்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

ஆரஞ்சு ஜூஸ் - 50 மில்லி.

கிரீன் கலர் - சில துளிகள்.

பின்க் கலர் - சில துளிகள்

செய்முறை:

மைதா மாவு பேக்கிங் பவுடர் நன்றாக மும்முறை சலித்து தனியே வைத்துக்கொள்ளவும். சர்க்கரையை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பேக்கிங் ட்ரே அளவிற்கு 2 ப்ரவுன் சீட் அல்லது பட்டர் பேப்பர் கட் பண்ணி, அதன் மேல் எண்ணெய் அல்லது பட்டர் தடவி பேப்பர் ட்ரேயுடன் ஸ்டிக் ஆகும் அளவிற்கு தடவவும்,மாவை அதன் மேல் dust பண்ணிக்கொள்ளவும்.

பட்டரை நன்றாக அடித்துக்கொண்டு, பின்பு பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடிக்கவும்.

முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக விட்டு, வெனிலா எசன்ஸ் சேர்த்து திரும்பவும் அடிக்கவும். ஆரஞ்சு ஜூஸ் சேர்க்கவும், கலந்து கொள்ளவும்.

சலித்து வைத்த மாவை மெதுவாக பட்டர் முட்டை கலவையில் மெதுவாக போட்டு பிரட்டி பிரட்டி கலந்து கொள்ளவும். சில் அடியில் மாவு இருக்கும். பீட்டரால் மாவு போட்ட பின்பு அடிக்கக்கூடாது.

இந்த மாவை மூன்றாக பிரித்துக்கொண்டு ஒரு பகுதியில் க்ரீன் கலர் மற்றொன்றில் பிங்க் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும், ஒரு பகுதியை அப்படியே வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் ஸ்பூன் அல்லது ஸ்பாட்சுலா கொண்டு மாவை வைக்கவும், ஒரு கலர் மாவின் மேல் இன்னொரு மாவு என்பது போல் வைக்கவும்,விருப்ப்பட்டால் ஃபோர்கினால் கலந்து கொள்ளலாம்.மல்டி கலராக வரும்,அப்படியே விட்டால் கொஞ்சம் அடுக்கு கலர் போல் வரும்.

தயார் செய்த ட்ரேயை முற்சூடு செய்த ஓவனில் 170 - 180 டிகிரியில் 35- 40 நிமிடம் வைத்து எடுக்கவும்.

நன்றாக ஆறியவுடன் கட் செய்து பரிமாறவும். மெல்லிய ரிப்பன் போல் கட் பண்ணவும்.

அழகான சாஃப்டான சுவையான ரிப்பன் கேக் ரெடி.

குறிப்புகள்:

மாவை தயார் செய்யும் போதே அவனை சூடுப்படுத்த தொடங்கலாம். உறவினர் ,ஃப்ரெண்ட்ஸ் வீடு செல்லும் போது செய்து எடுத்துச்சென்றால் மகிழ்வாக இருக்கும்,முக்கிய நாட்களில் வீட்டிலேயே கேக் செய்து அசத்தலாம்,வீட்டில் கேக் செய்து கொடுத்த பின்பு வெளியே வாங்கி சாப்பிட மனசு வராது.அதன் ருசியே தனி.