ராகி குக்கீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - ஒரு கப்

மைதா மாவு - அரை கப்

கோதுமை மாவு (அல்லது) மல்டி க்ரெய்ன் - ஒரு கப்

பேக்கிங் பவுடர் - முக்கால் தேக்கரண்டி

உப்பில்லாத வெண்ணெய் - 200 கிராம்

முட்டை - ஒன்று

ஏலக்காய்த் தூள் - சிறிது

பட்டை தூள் - சிறிது

 வெனிலா எசன்ஸ் - சிறிது

உப்பு - ஒரு சிட்டிகை

பொடித்த சர்க்கரை - ஒரு கப்

செய்முறை:

ராகி மாவுடன் கோதுமை மாவு

மைதா மாவு மற்றும் பேக்கிங் பவுடர் கலந்து சலித்து வைக்கவும்.

ரூம் டெம்பரேச்சரிலுள்ள வெண்ணெயுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் பதத்தில் கலந்து கொள்ளவும்.

பிறகு அடித்த முட்டையுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் உப்புச் சேர்த்து கலந்து

வெண்ணெய் கலவையில் ஊற்றி நன்றாகக் கலந்து கொள்ளவும்.

அத்துடன் சலித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

அவனை 160 - 170 c 'ல் முற்சூடு செய்யவும். மாவை சிறு உருண்டையாக உருட்டி

வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் வைத்து லேசாக அழுத்திவிடவும். (இதேபோல் மீதமுள்ள மாவையும் 2 இன்ச் அளவு இடைவெளிவிட்டு வைத்து அழுத்திவிடவும். விரும்பினால் ஃபோர்க் கொண்டு மேலே அழுத்திவிடலாம்).

பிறகு ட்ரேயை அவனில் வைத்து 15 நிமிடங்கள் பேக் செய்து எடுத்து

வேறு தட்டில் மாற்றி ஆறவிடவும். டேஸ்டி & க்ரிஸ்பி ராகி குக்கீஸ் ரெடி.

குறிப்புகள்: