மைதா கேக்
0
தேவையான பொருட்கள்:
மைதா - 250 கிராம்
ரவா - 100 கிராம்
சீனி - அரை கிலோ
ஏலக்காய் - 5
எண்ணெய் - அரை கிலோ
டால்டா - 200 கிராம்
நெய் - 100 கிராம்
உப்பு - சிறிதளவு
செய்முறை:
மைதாவை சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். ரவாவை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மைதா, ரவா, சீனி, ஏலக்காய், நெய், டால்டா, சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து சிறிது நேரம் ஊற விடவும்.
பிறகு கட்டமாக கேக் அளவில் வெட்டிக் கொள்ளவும். பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
பிறகு பொரித்து எடுத்த கேக் துண்டுகளை சீனி பாகில் போட்டு எடுக்கவும்.