மைதா மாவு கார பிஸ்கேட்
0
தேவையான பொருட்கள்:
மைதா - ஒரு கிலோ
நெய் - கால் கிலோ
முட்டை - நான்கு
சோடாமாவு - கால் தேக்கரண்டி
உப்பு - ஒன்றரை தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு பின்ச்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
ஓமம் - அரை தேக்கரண்டி
சுக்கு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகம், சுக்கு, ஓமத்தை லேசாக வறுத்து ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும்.
மைதாமாவை லேசாக வறுக்கவும் .
அதில் உப்பு சோடாமாவு, சர்க்கரை, பொடித்த பொடி நெய்யை உருக்கி போடவும்.
அனைத்தையும் சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொஞ்சம் தடிமனான சப்பாத்தியாக உருட்டி வேண்டிய வடிவத்தில் டைமண்ட் ஷேப்பிலோ, சாக்லேட் ஷேப்பிலோ கட் செய்து வாணலியில் எண்ணெயை காயவைத்து கருக விடாமல் பொரித்தெடுக்கவும்.
சுவையான மாலை நேர சிற்றுண்டி.
குறிப்புகள்:
நிறைய செய்து டப்பாவில் போட்டு வைத்து கொள்ளலாம்