மைக்ரோவேவ் வாழைப்பழ கேக்





தேவையான பொருட்கள்:
1. மைதா - 2 கப்
2. பேக்கிங் பவுடர் - 1 மேஜைக்கரண்டி
3. உப்பு - 1 தேக்கரண்டி
4. முந்திரி (அ) வால்னட் - 1/2 கப்
5. சர்க்கரை - 1 கப் + 4 தேக்கரண்டி
6. எண்ணெய் - 2/3 கப்
7. முட்டை - 3 (பெரியது, Room temperature)
8. வாழைப்பழம் - 4 (மசித்தது)
செய்முறை:
முந்திரி (அ) வால்னட்டை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும். மைக்ரோவேவ் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவவும்.
மைதா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
இதில் எண்ணெய் விட்டு நன்றாக கலக்கவும்.
முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக தேக்கரண்டி (அ) முட்கரண்டி கொண்டு கலக்கவும்.
இத்துடன் மசித்த வாழைப்பழம், நொறுக்கிய முந்திரி சேர்த்து கலக்கி உடனே மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றவும்.
மைக்ரோவேவ் HI'ல் (100%) 4 நிமிடம் வைக்கவும். திரந்து பார்த்து தேவை பட்டால் மீண்டும் 1 நிமிடம் வைத்து எடுக்கவும்.
குறிப்புகள்:
மைக்ரோவேவில் கேக் செய்ய எப்போதும் கேக் நடுவில் ஓட்டை வருவது போல் இருக்கும் பேக்கிங் பாத்திரம் சிறந்தது. காரணம் மைக்ரோவேவில் செய்யும் கேக்கள் சற்று நேரம் கூடினாலும் நடுவில் கறுகி போகும். அவரவர் மைக்ரோவேவுக்கு எற்றார் போல் நேரத்தை மாற்றி பேக் செய்யவும்.