மைக்ரோவேவ் ப்ரௌணி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3/4 கப் சீனி - ஒரு கப் கொக்கோ பவுடர் - 1/4 கப் மாஜரீன் - 100 கிராம் (10 நொடிகள் மைக்ரோவேவில் வைக்கவும்.) முட்டை - 2 பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சீனி
முட்டை
மாஜரீன் மூன்றையும் ஒன்றாக அடித்துக் கொள்ளவும். கோதுமை மாவு
கொக்கோ பவுடர்
பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக சலித்து வைக்கவும்.
இந்த இரண்டு கலவைகளையும் ஒன்றாக சேர்த்து நன்கு அடித்து கலந்துக் கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் இந்த கலவையை கேக் செய்யும் ட்ரேயில் ஊற்றி மைக்ரோவேவ் ஹையில் 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். விருப்பட்டால் மேலே உடைத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்க்கலாம்.
கேக் நன்கு வெந்ததும் எடுத்து ஒரு அகலமான ட்ரேயில் வைக்கவும். அதன் மேலே ஐஸிங் சீனியை தூவி அலங்கரிக்கவும்.
சுவையான எளிதில் செய்யக்கூடிய தேனீர் நேர சிற்றுண்டி தயார். சூடாக பரிமாறவும். இந்த குறிப்பைனை செய்து காட்டியவர்
அறுசுவையின் நீண்ட நாள் அங்கத்தினராகிய திருமதி. இமா அவர்கள். 24 வருடமாக ஆசிரிய பணியை சிறப்புடன் செய்துவரும் இவர்
சமையலில் அதனினும் அதிக வருடங்கள் அனுபவம் பெற்றவராய் இருக்கின்றார். உணவுகள் தயாரிப்பதில் இருக்கும் ஆர்வத்தைவிட அதை கலையுணர்வுடன் அழகுபடுத்தி பரிமாறுவதில்தான் மிகவும் ஆர்வம் என்று சொல்லும் இவர்
கைவினைப் பொருட்கள் செய்வதிலும் மிகத் திறமை வாய்ந்தவர்.