மைக்ரோவேவ் கேக் (1)
0
தேவையான பொருட்கள்:
கண்டென்ஸ்ட் மில்க் - 1 கப்
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் பௌடர் - 1 தேக்கரண்டி
மைதா - 1 1/2 கப்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
ஆரஞ்சு தோல் - துருவியது 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
மைதாமாவு, பேக்கிங் சேடா, பேக்கிங் பௌடர் எல்லாவற்றையும் நன்றாக சலிக்கவும்.
சலித்த பொருட்களுடன் தண்ணீர், மைதா, கண்டென்ஸ்ட் மில்க், வெண்ணெய், எசன்ஸ் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
ஆரஞ்சு தோலின் மென்மையான மேல்பகுதியை மட்டும் துருவவும்.
ஒரு மைக்ரோவேவ் ப்ருப் பாத்திரத்தில் கொஞ்சம் வெண்னெய் தடவி இந்த கலவையை ஊற்றி 10 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஹையில் பேக் செய்யவும்.
குறிப்புகள்:
இது எளிதில் செய்யக் கூடியது. குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது.
அவரவர் மைக்ரோவேவ் பவரை பொறுத்து கூட்டியோ குறைத்தோ வைக்கவும்.