மேங்கோ கேக் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 1/2 கப் சர்க்கரை - ஒரு கப் மாம்பழம் - பாதி பால் - அரை கப் வெனிலா எசன்ஸ் - 4 துளிகள் வெண்ணெய் - ஒரு கப் வால்நட் - சிறிது பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி பேங்கிங் சோடா - அரை தேக்கரண்டி

செய்முறை:

முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். வெண்ணெயை நன்கு நீர் போல் உருக்கிக் கொள்ளவும்.

பின் மைதா

சர்க்கரை

பேக்கிங் பவுடர் மற்றும் பேங்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

பின் மாம்பழத்தை தோல் உரித்து

ஒன்றுக்கு இரண்டாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.

பின் மைதா கலவையில் மாம்பழ கூழ்

பால்

வெனிலா எசன்ஸ் மற்றும் வெண்ணெயை ஊற்றவும். சிறிது மாம்பழக் கூழை தனியே எடுத்து வைக்கவும்.

அனைத்து கலவையையும் பீட்டரில் மென்மையாக நன்கு கலக்கவும்.

பின் ஒரு அவன் ட்ரேயில் 60% மேல் இருக்காதவாறு கலவையை ஊற்றவும். அப்போது தான் கேக் நன்கு வெந்து உப்ப தேவையான இடம் கிடைக்கும்.

அவனை 325 சூடுக்கு முற்சூடு செய்து ட்ரேயை 45 நிமிடம் வரை வைக்கவும். அவ்வபோது திறந்து பார்த்து நிறத்தை சோதனை செய்து கொள்ளவும்.

கேக் நன்கு பிரவுன் கலரில் மாறியதும் அதை திருப்பி போட்டு 5 நிமிடம் ஆற விடவும்.

பின் மீதமுள்ள மாம்பழக் கூழை கேக்கின் மீது தடவி வேண்டிய டிசைனை செய்து கொள்ளவும். சுவையான எக்லெஸ் மேங்கோ கேக் ரெடி.

குறிப்புகள்: