மேங்கோ கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - ஒரு கப் மாம்பழக் கூழ் - அரை கப் சர்க்கரை - அரை கப் (மாம்பழத்தின் இனிப்புக்கேற்ப) பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி முட்டை - 2 வெனிலா எசன்ஸ் / ஏலக்காய்த் தூள் - சிறிது வெண்ணெய் - 20 கிராம் பால் - கால் கப்

செய்முறை:

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா கலந்து சலித்து வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி தயாராக வைக்கவும்.

ஒரு கப்பில் முட்டையை அடித்து வைக்கவும்.

மாம்பழக் கூழுடன் சர்க்கரையைச் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

வெண்ணெயுடன் முட்டை மற்றும் மாம்பழச் சர்க்கரைக் கூழ் சேர்த்து ஒன்றாகச் கலந்து கொள்ளவும்.

அத்துடன் சலித்து வைத்துள்ள மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கடைசியாக பால் மற்றும் வெனிலா எசன்ஸ் / ஏலக்காய்த் தூள் சேர்த்து கலந்துவிடவும்.

இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி அவனில் வைக்கவும். (20 - 25 நிமிடங்கள் வரை ஆகும்). கேக்கின் உள்ளே டூத் பிக் அல்லது கத்தியை விட்டு ஒட்டாமல் வெளியே வரும் போது எடுக்கவும்.

ஸ்பாஞ்சி மேங்கோ கேக் ரெடி. நன்றாக ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

குறிப்புகள்: