மெடீரீயா கேக்
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
வெண்ணெய் - 85 கிராம்
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
லெமன் எசன்ஸ் - சில துளிகள்
சர்க்கரை - 85 கிராம்
பதப்படுத்திய ஆரஞ்சு தோல் - 250 கிராம்
செய்முறை:
பொடித்த சர்க்கரையையும் வெண்ணெயையும் நன்றாகக் குழைக்கவும். முட்டைகளை நன்றாக அடித்துக் கொள்ளவும்.
சர்க்கரையும் வெண்ணெயும் குழைத்த கலவையில் சிறிது சிறிதாக அடித்த முட்டைகளை ஊற்றி, விடாது அடித்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
மைதா மாவையும் பேக்கிங் பவுடரையும் சலித்துக் கொள்ளவும். ஆரஞ்சு தோலை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
குழைத்த கலவையில் மாவை சேர்த்துக் கலக்கவும். தேவையானால் பால் சேர்க்கவும்.
ஆரஞ்சுத் தோல் துண்டுகளையும் சேர்க்கவும்.
கேக் கலவை போடும் தட்டில் நெய் தடவி, மாவு தூவவும்.
பிறகு கலவையை அதில் பரப்பி 370 டிகிரி F சூட்டில் சுமார் 30 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்.
பேக் ஆனதும் ஒரு தட்டில் வைத்து ஆற வைக்கவும்.