முந்திரி கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம் சர்க்கரை - 40 கிராம் வெண்ணெய் - 100 கிராம் முட்டை - ஒன்று பேக்கிங் பவுடர் - இரண்டு தேக்கரண்டி உப்பு - அரை தேக்கரண்டி பால் - இரண்டு மேசைக்கரண்டி டாப்பிங் செய்ய தேவையானவை: வெண்ணெய் - 65 கிராம் சர்க்கரை - 50 கிராம் பொடித்த முந்திரி - 60 கிராம் வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி பால் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாக குழைக்கவும்.

முட்டையை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்த சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடிக்கவும்.

மாவையும் பேக்கிங் பவுடரையும் இருமுறை சலித்து வைத்துக் கொள்ளவும்.

பின் அடித்து வைத்துள்ள வெண்ணெய் முட்டை கலவையில் மாவை சிறிது சிறிதாக போட்டு கலக்கவும்.

இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக கலக்கவும். அதிகம் தளர்த்தியாக இருக்கக் கூடாது. கலவையை தட்டில் சமமாகப் போடவும்

டாப்பிங் செய்யும் முறை: முதலில் வெண்ணெயை உருக்கி அதில் சர்க்கரை

முந்திரி (பொடித்தது)

எசன்ஸ் மற்றும் பால் சேர்க்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.

ஆறின பிறகு அதை பேக் ஆகாத கேக்கின் மேல் மெதுவாக தடவவும்.

பின்னர் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

யம்மி முந்திரி கேக் ரெடி. திருமதி. ருக்சானா அவர்கள்

திருமதி. கரோலின் அவர்களின் குறிப்பினை செய்து பார்த்து அதை நம்முடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

குறிப்புகள்: