முட்டை இல்லாத வேகான் கேக் (Vegan Cake)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மா (மைதா)- 11/2 கப்

சீனி - 3/4 கப்

சோயா பால் - 3/4 கப்

பொடித்த கஜு - 1/4 கப்

ரெய்சின் - 25

பேகிங் சோடா - 2 தேக்கரண்டி

உப்பு - 1/4 டீஸ்பூன்

வனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி

சோள மா - 2 மேசைக்கரண்டி

8" கேக் பான் - 1

பேகிங் ஸ்பிரே

செய்முறை:

கேக் பானிற்கு பேகிங் ஸ்பிரே தடவி வைக்கவும்.

கோதுமை மா, உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து 3 தடவை அரிக்கவும் (சலிக்கவும்).

சோளமாவை சிறிது சோயா பாலில் கரைக்கவும்.

சீனி, சோயா பால், சோளமாக் கரைசல் சேர்த்து கிரைண்டரில் நன்கு அடிக்கவும்.

பின்னர் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இந்த கலவையை போட்டு அதனுள் மவை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். (அடிக்க வேண்டாம்)

பின்னர் பொடித்த கஜு, ரெய்சின், வனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

பின்னர் இந்த கலவையை கேக் பானில் ஊற்றி 350 Fஇல் 30 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.

குறிப்புகள்: