முட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - 150 கிராம்
உப்பு - கால் தேக்கரண்டி
சீனி - 100 கிராம் (இடிக்காதது)
கோல்டன் சிரப் - 30 கிராம்
வனஸ்பதி - 60 கிராம்
பால் - 100 மில்லி
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
சமையல் சோடா - அரை தேக்கரண்டி
இஞ்சித்தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
மைதாவைச் சலித்துக் கொள்ளவும். அத்துடன் பேக்கிங் பவுடர், சமையல் சோடா, சுக்குப் பொடி(இஞ்சித்தூள்) ஆகிய மூன்றையும் சலித்துப் போடவும்.
100 கிராம் சர்க்கரையை தண்ணீர் இல்லாத சட்டியில் இட்டு கிளறி நன்கு புகைவரும் போது சர்க்கரையில் கால் பங்கு தண்ணீரை அதில் ஊற்றினால் கிடைப்பது கோல்டன் சிரப்.
இதில் ஃப்ளம்ஸ், முந்திரிப்பருப்பு வகைகளை நறுக்கிப் போடவும்.
வெண்ணெய் அல்லது டால்டாவை அடுப்பில் வைத்து அது நன்கு உருகினதும் அதில் பாலை விடவும்.
பின் சர்க்கரை போடவும். அது சற்று ஆறின பிறகு கோல்டன் சிரப் விடவும்.
பிறகு மைதா கலவையை அதில் கொட்டி நன்கு கலக்கவும்.
அதை நெய் தடவிய தட்டில் கொட்டி பேக் பண்ணவும். ஓவனில் சுமார் 25 நிமிடம் இருந்தால் போதும்.