மில்க் ப்ரெட்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பால் ‍- ஒரு கப்

வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

தேன் -‍ ஒரு மேசைக்கரண்டி

ஆல் ப‌ர்ப்ப‌ஸ் (அல்லது) மைதா மாவு ‍- 3 க‌ப்

முட்டை - ஒன்று

சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

ஈஸ்ட் - ஒரு தேக்க‌ர‌ண்டி

உப்பு - ஒரு தேக்க‌ர‌ண்டி

செய்முறை:

ப்ரெட் மேக்கர் முறையில் மில்க் ப்ரெட் செய்ய தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். (எப்போதுமே

பேக்கிங் செய்வதற்கு முன்னதாகவே முட்டை

வெண்ணெய், பால் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு கொண்டு வந்து பிறகு செய்வது நல்லது). மாவை சலித்து வைத்துக் கொள்ளவும்.

ப்ரெட் மேக்கர் பேனில்

அதற்குண்டான பெடலைப் பொருத்தி

மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் அதே வரிசையில் ஒவ்வொன்றாக‌ போடவும்.

பிறகு அதை ப்ரெட் மேக்கர் மெஷினில் பொருத்திவிட்டு

சரியான செட்டிங்கை தேர்ந்தெடுக்கவும். இந்த அளவு பொருட்களுக்கு

1.5 lbs அளவு

பேசிக் ப்ரெட் என்ற ஆப்ஷனை சூஸ் செய்யவும். ம‌ற்ற‌வ‌ற்றையெல்லாம் ப்ரெட் மெஷின் பார்த்துக்கொள்ளும்.

இந்த‌‌ ப்ரெட் செய்ய‌ மொத்த‌ம்

சுமார் 3 ம‌ணி நேர‌ம் எடுக்கும். முத‌ல் 1.5 ம‌ணி நேர‌த்திற்குப்பிறகு பீப் சத்தம் வந்ததும்

ப்ரெட் பேனில் உள்ளே போட்டிருக்கும் பெட‌லை எடுத்துவிட்டு மாவை கையால் ஓரளவு சமப்படுத்தி அழுத்திவிட‌ வேண்டும்.

மீண்டும் ஒரு 1.5 ம‌ணி நேர‌ம் க‌ழித்து

ப்ரெட் ரெடியான‌த‌ற்குண்டான‌ பீப் ச‌த்த‌ம் வ‌ரும்போது

ப்ரெட்டை வெளியில் எடுத்து கம்பி ட்ரேயில் வைத்து ஆறவிடவும்.

ப்ரெட் ந‌ன்றாக சூடு ஆறிய‌தும் விரும்பிய‌ வ‌டிவில் துண்டுகள் போட்டு சுவைக்க‌லாம். ப‌ட்ட‌ர்

ஜாம் என‌ எதுவும் இல்லாம‌லே ருசியாக‌ இருக்கும் இந்த‌‌ மில்க் ப்ரெட்.

குறிப்புகள்: