மார்புள் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப் பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 1/4 கப் வெண்ணெய் அல்லது வெஜிடபுள் ஆயில் - 3/4 கப் முட்டை - 3 பால் - ஒரு கப் வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி கோகோ பவுடர் - கால் கப்
செய்முறை:
மைதாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து 2 அல்லது 3 முறை சலித்து வைத்துக் கொள்ளவும்.
வெண்ணெய்
சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும். அதனுடன் முட்டையை ஒவ்வொன்றாக சேர்த்து அடித்து வைக்கவும். பின் பாலை இதில் சேர்த்துவிட்டு
மைதாவை சிறிது சிறிதாக கொட்டி கலக்கவும். இதனுடன் வெனிலா எசன்ஸ் சேர்த்துக் கொள்ளவும். இந்த கலவை வழக்கமான கேக் மாவை விட சற்று திக்காக(கெட்டியாக) இருக்கும்.
இப்போது இந்த கேக் மாவில் இருந்து 3/4 கப் மாவை தனியே எடுத்து
அதனுடன் கோகோ பவுடரை சேர்த்து கலக்கவும்.
கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி மைதா தூவி தயார் செய்து வைக்கவும். இதில் வெனிலா(வெள்ளை நிற) கேக் மாவு கலவையை ஊற்றவும். அதில் சாக்லேட் (கோகோ) கலவையை மேலே வைக்கவும். ட்ரேயில் முக்கால் வாசி வரை மாவை நிரப்பினால் போதும்.
ஃபோர்க் அல்லது கத்தி கொண்டு சாக்லேட் கேக் மாவை சுழற்றி(swirl) marble effect கொண்டு வரவும்.
இந்த கலவையை 350 டிகிரி F முற்சூடு செய்த அவனில் 40 முதல் 45 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும்.
இந்த கேக் மாவு நன்கு உப்பி மேலெழும்பும்.
பிறகு வேறொரு ட்ரேயில் மாற்றி நன்கு ஆறியதும் கட் பண்ணவும்.
வெனிலா மற்றும் சாக்லேட் சுவைகளில் மார்புள் கேக் (marble cake) தயார். விரும்பினால் இதனை க்ரீம் பூசியும் அலங்கரிக்கலாம். இந்த கேக் சுலபமாக தயாரிக்க கூடியது.