மார்பிள் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 100 கிராம்

சர்க்கரை - 100 கிராம்

பட்டர் அல்லது மார்ஜரின் - 100 கிராம்

முட்டை - 100 கிராம்( 2)

வெனிலா எசன்ஸ் - அரை ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - அரை ஸ்பூன்

கோக்கோ அல்லது சாக்லேட் பவுடர் - 25 கிராம்

ப்ரவுன் கலர் - 2 ட்ராப்(optional)

செய்முறை:

மாவை பேகிங் பவுடர் சேர்த்து மும்முறை சலித்து தனியே வைக்கவும்.சர்க்கரையை பொடித்து வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயை பட்டர் பேப்பர் போட்டு எண்ணெய் தடவி மாவு (டஸ்ட்) தூவி ரெடி செய்து வைக்கவும்.

பட்டரை பீட் செய்து, பின்பு அதனுடன் பொடித்த சர்க்கரையை சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.

முட்டையை ஒன்றன் பின் ஒன்றாக விட்டு வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.நன்றாக பீட் செய்து கொள்ளவும்.

சலித்தாமாவை கொஞ்சம் கொஞ்சமாக பட்டர் முட்டை கலவையில் போட்டு மெதுவாக கலந்து(fold)பிரட்டி கொள்ளவும்.

தயார் செய்த மாவுக்கலவையில் இருந்து ஒரு பகுதி எடுத்து அதனுடன், சாக்லேட் அல்லது கோக்கோ பவுடரை கட்டியாக கரைத்து சேர்க்கவும். இன்னும் கலர் டார்க்காக வேண்டும் என்றால் ப்ரவுன் கலர் சேர்த்துக்கொள்ளலாம்.

பேக்கிங் ட்ரேயில் சாக்லேட் பவுடர் சேர்த்த மாவுக் கலவையை ஸ்பூனால் எடுத்து ஆங்காங்கு எடுத்து வைக்கவும்,பின்பு இடை வெளிப்பகுதியில் மொத்த மாவுக்கலவையையும் ஸ்பூனால் இடையில் வைக்கவும். பின்பு ஃபோர்கினால் வரி போடுவது போல் மிக்ஸ்செய்யவும்,அதிகம் மிக்ஸ் செய்யக்கூடாது .ப்ரவுன் கலரும் கிரீம் கலரும் கலந்து மார்பிள் போல் இருக்கும்.

பின்பு முற்சூடு செய்த அவனில் 170- 180 டிகிரியில் 35 - 40 நிமிடம் வைத்து எடுக்கவும். நன்றாக ஆறிய பின்பு கட் செய்து பரிமாறவும்.

அழகான, சாஃப்டான, சுவையான மார்பிள் கேக் ரெடி.

குறிப்புகள்:

இது போல் மற்ற கலரும் சேர்த்து மார்பிள் கேக் செய்யலாம்,(பின்க்,பச்சை,ஆரஞ்சு) கலரை 2-4 ட்ராப் சேர்த்து செய்து பார்க்கலாம்.