மார்பில் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 250 கிராம் பட்டர் - 250 கிராம் முட்டை - 4 பால் - கால் கப் வெனிலா எஸன்ஸ் - 2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி மைலோ பவுடர் - 4 மேசைக்கரண்டி டாப்பிங்: குக்கிங் சாக்லெட் - 150 கிராம் ஸ்ப்ரிங்கல்ஸ் - 2 மேசைக்கரண்டி

செய்முறை:

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.

ரூம் டெம்ப்ரேச்சரில் பட்டரையும்

அரைத்து மாவாக்கிய சீனியையும் பீட்டரினால் நுரைக்க அடிக்கவும்.

அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடிக்கவும்.

பின் பேக்கிங் பவுடர் மற்றும் சலித்த மைதாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதனுடன் பால் சேர்த்து கலக்கவும். (பீட்டரில் நம்பர்.1 ஸ்பீடில் வைத்து கலக்கவும்).

பின் எஸன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

கலவையை இரண்டாகப் பிரித்து

ஒரு பாதியில் மைலோ பவுடர் சேர்த்து கலக்கவும்.

பேக்கிங் சீட் போட்டு தயாராக வைத்திருக்கும் ட்ரேயில் இரண்டு கலவைகளையும் இவ்வாறு போட்டுக் கொள்ளவும்.

ஒரு கரண்டியால் மெதுவாக கலக்கவும். அதிகமாக கலக்க வேண்டாம். கலந்ததும் இதேபோல் இருக்கும்.

முற்சூடு செய்யப்பட்ட அவனில் 150' ல் 45 நிமிடங்கள் வைத்து பேக் செய்து எடுக்கவும்.

குக்கிங் சாக்லெட்டை மைக்ரோவேவ் பவுலில் உடைத்துப் போட்டு 2 நிமிடம் வைத்து உருக்கவும். அல்லது டபுள் பாய்லிங் முறை மூலமாக உருக்கவும்.

கேக் நன்றாக ஆறியதும் அதன் மேல் உருக்கி வைத்துள்ள குக்கிங் சாக்லெட் கலவையை பரவலாகத் தடவி

உடனே ஸ்ப்ரிங்கல்ஸ் தூவவும். பின் விரும்பியவாறு துண்டுகள் போடவும்.

கண்ணைக் கவரும் பார்ட்டி ஸ்பெஷல் மார்பில் கேக் ரெடி.

குறிப்புகள்: