மார்பல் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தயிர் - ஒரு கப் சீனி - 2 கப் மைதா - 2+1 கப் ஸ்வீடன்ட் கொக்கோ பவுடர் - ஒரு கப் ஆயில் - முக்கால் கப் முட்டை - 3 பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முட்டையை நன்றாக அடித்து

அதனுடன் தயிர் மற்றும் சீனி சேர்த்து கலந்து கொள்ளவும்.

பின் பேக்கிங் பவுடர் சேர்த்து கலக்கவும்.

நன்றாக கலந்த பின் ஆயில் சேர்க்கவும்.

இதனுடன் 2 கப் மைதா சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

இந்த கலவையை சமமாகப் பிரித்து 2 கோப்பைகளில் எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கோப்பை மாவில் ஒரு கப் மைதாவையும்

மற்றொரு கோப்பையில் ஒரு கப் கொக்கோ பவுடரையும் போட்டு கலக்கவும்.

வொயிட் கேக் மிக்ஸ் மற்றும் சாக்லெட் கேக் மிக்ஸ் தயார்.

பிறகு கேக் ட்ரேயில் ஒரு கரண்டி வொயிட் கேக் மிக்ஸ் ஊற்றவும்.

அதன் மேல் ஒரு கரண்டி சாக்லெட் கேக் மிக்ஸை ஊற்றவும்.

இதேபோல் மாற்றி மாற்றி இரண்டு மிக்ஸையும் ஊற்றவும். பெரிய வட்டமாக வரும்.

இதை அவனில் வைத்து 180° சூட்டில் 40 நிமிடங்கள் பேக் செய்து

டூத் பிக் கொண்டு கேக் வெந்துவிட்டதா என பார்த்து எடுக்கவும். அவரவர் உபயோகிக்கும் அவனிற்கு ஏற்ப நேரத்தை மாற்றி கொள்ளவும்.

இந்த கேக்கை வெட்டினால் இப்படி மார்பல் ஷேப்பில் இருக்கும். சாக்லெட் ஃப்ளேவர் சேர்த்திருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.

குறிப்புகள்: