மாங்காய் ஜாம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் துருவியது - 2 கப் சர்க்கரை - 2 கப் நெய் - அரை தேக்கரண்டி [விரும்பினால்] ஏதேனும் ஒரு பொடி வகை பொடி வகை 1: ஏலக்காய்

பட்டை

லவங்கம் கலவை தூள் - கால் தேக்கரண்டி உப்பு - ஒரு சிட்டிகை பொடி வகை 2: கரம் மசாலா தூள் - 2 சிட்டிகை உப்பு - ஒரு சிட்டிகை பொடி வகை 3: மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை வறுத்து பொடித்த சீரக தூள் - கால் தேக்கரண்டி உப்பு - சுவைக்கு பொடி வகை 4: ஏலக்காய் தூள் - சிறிது உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

பச்சை மாங்காயை தோல் நீக்கி துருவி வைக்கவும்.

துருவலோடு சர்க்கரை சேர்த்து 30 நிமிடம் வைக்கவும். சர்க்கரையின் அளவு மாங்காயின் புளிப்புக்கு ஏற்றபடி சேர்க்கவும்.

இப்போது நீர்த்து இருக்கும் மாங்காய் சர்க்கரை கலவையை அடுப்பில் வைத்து சிறுந்தீயில் கிளறவும்.

சர்க்கரை சற்று கெட்டியாகும் போது தூள் வகை சேர்க்கவும். மேலே சொல்லி இருக்கும் பொடி வகை காம்பினேஷனில் எந்த வகை காம்பினேஷன் விரும்பினாலும் சேர்க்கலாம். நான் சேர்த்திருப்பது மூன்றாவது வகை. இனிப்பு

புளிப்பு

காரம் கலந்து இருக்கும்.

கலந்து விட்டு ஒரு கம்பி பதம் வர துவங்கும் போது எடுத்து நெய் விட்டு கலந்து விடவும். சுவையான மாங்காய் ஜாம் தயார். இது ரொட்டி வகை

ப்ரெட் போன்றவற்றுக்கு நல்ல காம்பினேஷன். நன்றாக ஆறியதும் ஏர்டைட் பாக்ஸில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

குறிப்புகள்: