மாங்காய்ப்பாகு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாங்காய் - 2

வெல்லம் - 3/4 கிலோ

தேங்காய் - 1

ஏலம் - 6

முந்திரி - 50 கிராம்

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

அதிகம் புளிப்பில்லாத மாங்காய்கள் தேர்ந்தெடுக்கவும். தோல் சீவி திக்காக இல்லாமல் கத்தியால் சீவிக் கொள்ளவும்.

1 டம்ளர் நீரில் மாங்காயைப் போட்டு வேக வைக்கவும். நீர் வற்றி வருகையில் வெல்லத்தை உடைத்துப் போடவும்.

நுரைத்து வரும் பொழுது, தேங்காய்த்துருவல் சேர்த்து, கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.

ஏலத்தை தூள் செய்து சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும். பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

குறிப்புகள்:

மாங்காய் சேர்ப்பதற்கு பதில் பலாப்பழம், அன்னாசி போன்றவற்றிலும் செய்யலாம்