மரவள்ளிக்கிழங்கு கேக் (3)
0
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 500 கிராம்
தேங்காய் - அரை மூடி
ரவா - ஒரு கப்
சீனி - முக்கால் கப்
ஏலக்காய் - 3
நெய் - 50 கிராம்
பசும்பால் - அரை கப்
கேசரிபவுடர் - சிறிது
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி காய் சீவும் கட்டையில் சீவிக் கொள்ளவும்
தேங்காயை துருவிக் கொள்ளவும்
ஏலக்காயை தோலை எடுத்து அரிசியை எடுத்து பொடியாக்கவும்
கிழங்குடன் எல்லாப் பொருள்களையும் கலந்து கேக் வைக்கும் தட்டில் சிறிது வெண்ணெய் தடவி கிழங்கு கலவையை அதில் ஊற்றவும்
280 F சூடாகிய அவனில் அதை வைத்து மேலே சிவந்து வெந்தவுடன் எடுத்து துண்டு போட்டு சாப்பிடவும்.