மரவள்ளிக்கிழங்கு கேக் (2)
தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - 2 கிலோ
மைதா மாவு - 5 மேசைக்கரண்டி
ஜவ்வரிசி மாவு (தப்பியோக்கா) - 5 மேசைக்கரண்டி
தேங்காய்பால் டின் - 400 மி.லி
கன்டென்ஸ்ட் மில்க் - ஒரு டின்
பட்டர் - 125 கிராம்
முட்டை - 3
வெனிலா பவுடர் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அவரவர் சுவைக்கேற்ப
செய்முறை:
மரவள்ளிக்கிழங்கை தோல் நீக்கி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
மேலும் முட்டையை கலக்கவும்.
அதில் சர்க்கரை, இரண்டு வகை பால், மற்றும் வெனிலா பவுடர், மைதா, ஜவ்வரிசி மாவு ஆகியவற்றை கட்டி இல்லாமல் பிசையவும்.
பின்பு துருவிய கிழங்கையும், உருக்கிய பட்டரையும் சேர்க்கவும், இதற்கிடையில் கேக் அவனில் 200 டிகிரியில் செட் செய்யவும்,(அவரவர் அவனுக்கு தகுந்தாற்போல் செட் செய்யலாம்).
பின்பு கேக் செய்யும் தட்டில் சிறிது பட்டர் தடவி அதில் இந்த கலவையை கொட்டி பரப்பி அவனில் 30 நிமிடம் பேக் செய்யவும், வெந்ததை சரி பார்த்து வெளியே எடுக்கவும்.