மரவள்ளிக்கிழங்கு கேக் (1)





தேவையான பொருட்கள்:
மரவள்ளிக்கிழங்கு - ஒன்றரை கப் (3/4 கிலோ) தேங்காய் துருவல் - அரை கப் சீனி - ஒன்றரை கப் முட்டை - 3 கன்டண்ஸ்ட் மில்க் - அரை டின் நெய் - 50 கிராம் ஆரஞ்சு எசன்ஸ் - அரை தேக்கரண்டி
செய்முறை:
மரவள்ளி கிழங்கை கேரட் துருவியால் துருவி வைக்கவும்.
முக்கால் பங்கு மரவள்ளிக்கிழங்கு துருவலுடன்
தேங்காய் துருவல்
கன்டண்ஸ்ட் மில்க் சேர்த்து ஒரு மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த கலவையில் முட்டை
சீனி
நெய் சேர்த்து கலக்கவும்.
பின் கால் பங்கு மரவள்ளிக்கிழங்கு துருவலையும் அதில் சேர்த்து கலக்கவும்.
ஆரஞ்சு எசன்ஸ் விட்டு மீண்டும் சிறிது கலக்கவும். பின் நெய் தடவிய தட்டில் ஊற்றி 180c ல் 40 நிமிடம் பேக் செய்யவும்.
ஆறிய பின்பு துண்டங்களாக போடவும். ஆரஞ்சு எசன்ஸ் இல்லையெனில் பரவாயில்லை.