மசாலா க்ரிஸ்பீஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)

சீரகம் - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 2 இனுக்கு (பொடியாக நறுக்கியது)

உப்பு - தே.அ

பால் - சிறிதளவு

எண்ணைய் - பொரிக்க தே.அ

செய்முறை:

வெங்காயம் , கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு ஆகியவற்றை நன்கு கலக்கவும்.

அத்துடன் மைதாவை சேர்த்துக்கொள்ளவும்.

வாணலியில் 2 1/2ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை தாளித்து மைதா கலவையில் போடவும்.

தே.அ பாலை ஊற்றி மைதாவை கெட்டியான மாவு பதத்திற்குப் பிசைந்து மெல்லிய சப்பாத்தியாக இடவும்.

வட்டமான அச்சில் வட்ட வட்டமாக வெட்டியெடுக்கவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி மிதமான சூட்டில் க்ரிஸ்பீஸ்களை ஃப்ரவுன் நிறத்தில் பொரிக்கவும்.

ஆறியதும் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்புகள்: