ப்ளுபெர்ரி சிரப்
0
தேவையான பொருட்கள்:
ப்ளுபெர்ரி - 1 கப்
மேப்பில் சிரப் - 1/4 கப்
செய்முறை:
முதலில் ப்ளுபெர்ரியை நன்றாக கழுவி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ப்ளுபெர்ரியை போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் வேகவைக்கவும்.
இப்பொழுது அதில் இருந்து ஜுஸ் வெளியில் வரும்.
அந்த சமயம் மேப்பில் சிரப்பினை அத்துடன் சேர்த்து நன்றாக கிளறி மேலும் 5 நிமிடம் வைக்கவும்.
இப்பொழுது சுவையான ப்ளுபெர்ரி சிரப் ரெடி.
குறிப்புகள்:
இதனை பான் கேக், வப்பிள்ஸ் போன்றவை மீது சேர்த்து பரிமாறலாம்.