ப்ளம் கேக் (1)
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
வெண்ணெய் - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 20 கிராம்
சர்க்கரை(காரமல் செய்ய) - 50 கிராம்
பதப்படுத்திய ஆரஞ்சு தோல் - 20 கிராம்
உலர்ந்த செர்ரி பழம் - 20 கிராம்
விதையில்லாத திராட்சை - 20 கிராம்
முந்திரி பருப்பு - 20 கிராம்
முட்டை - 3
தண்ணீர் - 50 மில்லி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
கறுப்பு திராட்சை - 20 கிராம்
பாதாம் பருப்பு - 10 கிராம்
அத்திப் பழம் - 20 கிராம்
மசாலா கலவை - 5 கிராம்
சுக்குப் பொடி - 5 கிராம்
பைனாப்பிள் எசன்ஸ் - சிறிது
பாதாம் எசன்ஸ் - சிறிது
வெனிலா எசன்ஸ் - சிறிது
லெமன் எசன்ஸ் - சிறிது
செய்முறை:
சர்க்கரை, வெண்ணெய் இலேசாக ஆகும் வரை குழைக்கவும்.
எல்லா உலர்ந்த பழ வகைகளையும், பருப்பு வகைகளையும் சிறு துண்டுகளாக்கவும்.
ஒரு மேசைக்கரண்டி மைதா மாவை பழங்களின் மேல் தூவி பிசறிக் கொள்ளவும்.
மைதா, பேக்கிங் பவுடர், சுக்குப் பொடி, மசாலா பவுடர், பேக்கிங் பவுடர் இவற்றை ஒன்றாய்ச் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
முட்டைகளை உடைத்து நன்றாக அடித்துக் கொண்டு சர்க்கரையும் வெண்ணெயும் கலந்த கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி தொடர்ந்தாற்போல் அடித்துக் கொண்டேயிருக்கவும்.
வீட்டில் உபயோகிக்கும் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் 50 கிராம் போட்டு அடுப்பில் வைக்கவும். (தண்ணீர் விடக் கூடாது).
நன்றாகக் கறுத்து, பழுப்பு நிறம் வந்தபிறகு 50 மில்லி தண்ணீர் விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
ஆற வைத்து காரமல் சர்க்கரையையும் வெண்ணெய், சர்க்கரை கலந்த கலவையில் போட்டு கலக்கவும்.
பழ வகைகளையும் மைதா மாவையும் கலவையில் போட்டு மெதுவாக கலக்கவும்.
நெய் தடவி மாவு தூவிய வட்டத்தட்டில் போட்டு 350 டிகிரி F சூட்டில் வைத்து சுமார் ஒரு மணிநேரம் வரை பேக் செய்யவும்.