ப்ளம் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 100 கிராம் மைதா - 90 கிராம் மார்ஜரின் - 90 கிராம் முட்டை - 2 பேக்கிங் சோடா - கால் தேக்கரண்டி சோள மாவு - 10 கிராம் ட்ரை ப்ரூட்ஸ் (ட்யூட்டி ஃப்ரூட்டி) - 2 மேசைக்கரண்டி ஜெல் - கால் தேக்கரண்டி வெனிலா எசன்ஸ் - 3 சொட்டுகள்

செய்முறை:

தேவையான பொருட்களை சரியாக அளந்து எடுத்துக் கொள்ளவும். மைதாவை

பேக்கிங் சோடா

கார்ன் ப்ளோருடன் கலந்து சலித்து எடுக்கவும். பொடித்த சர்க்கரையை தனியே சலித்து எடுக்கவும். பேக்கரிகளில் emulsifier ஆக அதற்கென உள்ள ஜெல் பயன்படுத்துவார்கள். இதுவும் வெளியில் கடைகளில் கிடைப்பது கடினம். இது இல்லாத பட்சத்தில் தவிர்த்து விடலாம். ஆனால்

கேக்கிற்கு சாப்ட்னெஸ் கொடுப்பது இந்த ஜெல்தான். சில பேக்கரிகளில் கேக்குகள் மிகவும் மிருதுவாக இருக்கும். ஜெல் அதிகம் சேர்க்கின்றார்கள் என்று அர்த்தம். உடலுக்கு உகந்தது அல்ல.

முட்டை வாசனை கேக்கில் வருபதை விரும்பாதவர்கள்

இரண்டு முட்டை என்பது ஒன்று அல்லது ஒன்றரை முட்டையாக குறைத்துக் கொள்ளலாம். ஆனால்

கண்டிப்பாக முட்டை வேண்டும். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி

ஜெல் சேர்த்து

அதனுடன் சீனியை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாதவாறு நன்றாக கலக்கவும். கலக்கும்போது ஒரே சீராக

ஒரே சுற்றுத் திசையில் கலக்கவும்.

இதுதான் கேக் களுக்கு பயன்படுத்தும் மார்ஜரின். ஈஸ்ட் மார்ஜரின் என்பார்கள். சற்று கடினமாக இருக்கும். நிறத்திலும் மங்கலாக இருக்கும். இதைத் தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து

கலக்கி அல்லது கரண்டி கொண்டு கலக்க வேண்டும். சிறிது நேரம் கலக்கினாலே போதும். நன்கு இளகி வந்துவிடும்.

இதனை வெயிலிலோ

சூட்டிலோ காட்டாமல்

அப்படியே கரண்டி கொண்டு கலக்கினாலே போதுமானது. மிகவும் சாஃப்டாக வந்துவிடும்.

பிறகு

முட்டை சீனி கலவையில் மார்ஜரினை சேர்த்து சீராக கலக்கவும். அதன்பின்னர் மைதாவை சேர்த்து கலக்கவும். கட்டிகள் இல்லாமல்

கெட்டியான இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை சீராக கலக்கவும். வேகம் கொடுக்கக்கூடாது. கையினால் கலக்கும் கலக்கி கொண்டு கலக்கினால்

கலக்கும்போது வெப்பம் உண்டாகாது. பீட்டர்(beater) மெஷின் கொண்டு கலக்கும்போது வெப்பம் உண்டாகும். இது மூலப்பொருட்களின் தன்மையை பாதிக்கும். கேக் அவ்வளவு சரியாக வராது.

கலவையில் டூட்டி ப்ரூட்டி

வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

இப்போது கலந்து வைத்துள்ளதை கேக் ட்ரேயில் கொட்டி

அவனில் வைத்து வேகவிடவும். கேக் கப் அல்லது ட்ரேயில் கலவையைக் கொட்டும்போது

கப்பின் பாதி அளவிற்கு சேர்த்தால் போதுமானது. கேக் வெந்து நன்றாக மேலெழும்பி வரும். அதற்கு இடம் தேவை. பாத்திரம் நிறையும்படி கலவை வைக்கக்கூடாது. 170 டிகிரி C ல் சுமார் 25 நிமிடங்கள் வைக்க வேண்டும். 20 நிமிடங்களுக்கு பிறகு திறந்து வெந்துவிட்டதா என்பதை ஒரு டூட் பிக் எடுத்து குத்தி பார்க்கவும். குச்சியில் மாவு ஒட்டாமல்

குச்சி எளிதாக உள்ளே சென்று வந்தால் பதமாக வெந்து விட்டது என்று அர்த்தம்.

மேற்புறம் எப்போதும் சற்று சிவந்து போகும். மிகவும் கருக விடாமல்

ஓரளவிற்கு சிவந்தவுடன்

கேக் வெந்ததை உறுதி செய்துகொண்டு எடுத்துவிடவும்.

கேக் கப்பை கவிழ்த்தால் உட்புறம் நன்றாக வெந்து

பதமாக இருக்க வேண்டும்.

விரும்பிய வடிவில் கட் செய்து கொள்ளலாம்.

சுவையான ப்ளம் கேக் தயார். இது ஒரு பேசிக் கேக். இதனை தயாரித்து

இதற்கு மேல் விரும்பிய ப்ளேவரில் கிரீம் தயாரித்து ஐசிங் செய்து கொள்ளலாம். கூடை கேக் ம் செய்யலாம்.

இப்படி வட்டமாக வடை வடிவில்கூட செய்யலாம். :-)

குறிப்புகள்: