போன்விடா கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதாமாவு -1கப்

போன்விடா -5ஸ்பூன்

சர்க்கரை -1கப்

நெய்(அ)டால்டா -1/4கப்

ஏலக்காய்பொடி -1/4ஸ்பூன்(விரும்பினால்)

செய்முறை:

பாத்திரத்தில் 1ஸ்பூன் நெய்விட்டு மைதாமாவை நன்கு வறுக்கவும்.மாவு ஆறியவுடன் போnவிடாவை நன்கு கலந்துவைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சவும்.பாகு கொதிவரும்பொழுது சிறிது சிறிதாக மைதாமாவை தூவி கைவிடாமல் கிளறவும்.

எல்லாமாவையும் சேர்த்தபிறகு நெய்(அ)டால்டா ஊற்றி,ஏலக்காய்பொடி போட்டு கிளறவும்.கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் கட்பண்ணவும்.

குறிப்புகள்: