பைனாப்பிள் சீஸ் கேக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள் - பாதி (அ) நறுக்கிய துண்டுகள் - 1 1/2 கப் பிஸ்கட்ஸ் - 8 (britannia marie) க்ரீம் சீஸ் - அரை கப் பட்டர் - கால் கப் நீர் இல்லாத கெட்டி தயிர் - அரை கப் சர்க்கரை - கால் கப் + தேவைக்கு அகர் அகர் - ஒரு மேசைக்கரண்டி அளவு க்ரீம் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

பிஸ்கட்டை மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். தயிரை இரவு முழுக்க துணியில் கட்டி நீரை வடித்து அரை கப் அளவு எடுத்து வைக்கவும். அரை கப் பைனாப்பிளை ஸ்மூத்தாக அடித்து வைக்கவும். விரும்பினால் வடிகட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் வெண்ணெய் விட்டு உருகியதும் பொடித்த பிஸ்கட் தூளை சேர்த்து கலந்து விடவும். (8 பிஸ்கட் என்றால் ஏறக்குறைய 1/2 - 3/4 கப் வரும்.)

கேக் செட் செய்ய போகும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் பிஸ்கட் கலவையை போட்டு ஒன்று போல பரப்பி விடவும்.

எதாவது கரண்டியின் பின் பக்கம் கொண்டு அழுத்தி விடவும். இதை ஃப்ரிட்ஜில் வைத்து செட்டாக விட்டு சீஸ் கலவை செய்ய தயாராகலாம்.

க்ரீம் சீஸ்

கெட்டி தயிர்

க்ரீம் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஸ்மூத்தாக கரண்டியால் கலந்து விடவும்.

இதில் சர்க்கரை மற்றும் ஸ்மூத்தாக அடித்து வைத்த பைனாப்பிள் பியூரி கலந்து விடவும்.

பின் கால் கப் பொடியாக நறுக்கிய பைனாப்பிள் துண்டுகளை கலந்து விடவும். அகர் அகரை கால் கப்புக்கும் குறைவான நீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி எடுக்கவும்.

இன்னும் கால் கப் பைனாப்பிளை நீர் விட்டு சுவைக்கு சர்க்கரை சேர்த்து ஜூஸாக அடித்து வடிகட்டவும்.

இப்போது சீஸ் கலவையில் 3/4 பாகம் அகர் அகர் கலவை விட்டு கலந்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த பாத்திரத்தில் பிஸ்கட் மேல் ஊற்றவும். இதை மீண்டும் சில நிமிடங்கள் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

பைனாப்பிள் ஜூஸுடன் மீதம் உள்ள அகர் அகர் கலவை சேர்த்து க்ரீம் சீஸ் கலவை மேல் ஊற்றவும்.

இவற்றை குறைந்தது 5 மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சீஸ் கேக் தயார்.

பத்திரமாக பாத்திரத்தை விட்டு வெளியே எடுக்கவும். மேலே பொடியாக நறுக்கிய பைனாப்பிள் தூவி அலங்கரிக்கவும்.

உள்ளே ஃப்ரெஷ் பைனாப்பிள் துண்டுகளுடன் சுவையான சீஸ் கேக் தயார்.

குறிப்புகள்: